தமிழகம் முழுவதும் மே 17ஆம் தேதி வரை சில தளர்வுகள் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக அமைச்சரவை கூட்டம் 2 மணி நேரங்களுக்கு மேலாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. முதலமைச்சரின் அறிக்கையாக இது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழகத்தில் மே 17ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்கள் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு 11 வகையான தடைகளையும் பிறப்பித்துள்ளது.
அதில்,
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பட தடை
வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை.
திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்கங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், போன்ற இடங்களுக்கு தடை.
அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை.
பொதுமக்களுக்கான விமானம், ரயில், பொது போக்குவரத்து தடை.
டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா தடை.
மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தடை.
தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர ) தங்கும் ஹோட்டல், ரிசார்ட்கள் செயல்பட தடை
இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க்கக் கூடாது.
திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது நடைமுறைகளை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.