மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஊரடங்கு குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் ஊரடங்கை வரும் 17ம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. மே 4 முதல் மே 17 நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில்,
எதெற்கெல்லாம் தடை?
- நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை.
- திரையரங்கு, மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைக்கு தடை.
- பள்ளிகள், கல்லூரிகள், வழிகாட்டுதல் தலங்களில் பொது மக்கள் வழிபாடு, அனைத்து மதம் சார்த்த கூட்டங்களுக்கும் தடை தொடரும்.
- சலூன் கடைகள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதியில்லை.
மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு தடை தொடரும். - திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும்.
எதெற்கெல்லாம் அனுமதி :
- சென்னையில் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி நடக்கும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் பணிகள் செய்ய அனுமதி.
- அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
- உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம்.
- ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், எலக்ட்ரிக் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
- பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோர் மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் செயல்பட அனுமதி தேவையில்லை.
- மொபைல் கடைகள், வீட்டு உபயோக பொருள் கடைகள், மின் மோட்டார் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்படலாம்.
- ஊரக, நகர்ப்புற பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.
- கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்”
- நகராட்சி, மாநகராட்சிகளில் மால்கள், வணிக வளாகங்களை தவிர்த்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கலாம்.
- செங்கல் சூளைகள், கல்குவாரிகள், எம்-சாண்ட், கிரஷர்கள் மற்றும் அவற்றிற்கான போக்குவரத்துக்கு அனுமதி.
- ஐடி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 20 பேரைக் கொண்டு செயல்பட அனுமதி
- நகர்ப்புறப் பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
- அச்சகங்கள் செயல்பட அனுமதி
- சென்னையை தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி
- 25% பணியாளர்களுடன் பொருளாதார சிறப்பு மண்டலங்கள், ஏற்றுமதி நிறுவனம் செயல்படலாம்.
- தமிழகத்தில் கட்டுமானப்பொருட்கள் எடுத்துச் செல்ல தடை கிடையாது என அறிவித்துள்ளனர்.
- கிராமப்புறங்களிலுள்ள நூற்பாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.