சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் பல்வேறு கட்ட தடுப்பு பணிகளையும், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக காவல்துறையின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக பணியாக இருக்கிறது. தற்போது காவல்துறையினரும் கொரோனாவால் பாதிக்கப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது. தற்போது டிஜிபி அலுவலகத்தில் இருக்கக்கூடிய உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரக்கூடிய 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இரண்டு காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பணி செய்த கட்டுப்பாட்டு அறையில் கிரிமிநாசினி மூலமாக மாநகராட்சி அதிகாரிகள் தூய்மைப்படுத்தி வருகின்றனர். அதேபோல சென்னை புதுப்பேட்டை ஆயுதப் படையில் பணியாற்றும் பெண் காவலருக்கும், ஓட்டேரி காவல் நிலைய காவலருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.