Categories
உலக செய்திகள்

பிரிட்டன் செல்ல இருந்த லாரி… “கார் உதிரி பாகங்களுக்கு இடையே போதை பொருள்”.. டிரைவரை கைது செய்த போலீசார்…!!

கார் உதிரி பாகங்கள் கொண்டு செல்வதாக கூறி போதை பொருள் கடத்திய லாரியை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

கார் உதிரிபாகங்களை பிரித்தானியாவிற்கு எடுத்து செல்லும் லாரி ஒன்றை coquelles பகுதியில் பிரான்ஸ் எல்லைப்படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டைப் பெட்டிகள் அதிக அளவில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை உடைத்துள்ளனர்.

சோதனை செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளில் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 260 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து லாரி ஓட்டி வந்த ரொமேனியாவை சேர்ந்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்து போதைப்பொருள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |