50 வயதிற்குட்பட்ட விருப்பமுள்ள ஆசிரியர்களை கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபடுத்தலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
பல ஆசிரியர்கள் தன்னார்வமாக பணியாற்ற விருப்பம் தெரிவிப்பதால் மருத்துவம் அல்லாத பணிகளுக்கு பயன்படுத்தலாம் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வரை, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் போராடி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாட்டு பணிகளில் பணியாற்ற பல ஆசிரியகர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 50 வயதுக்கு கீழ் உள்ள ஆசிரியர்களை மருத்துவம் அல்லாத பணிகளில் ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.