Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 2,757 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10,049 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது 1384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |