தமிழகத்தில் இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட பேரில் ஆண்கள் – 158 பேர், பெண்கள் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதல்முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 46.64% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக தொடர்கிறது.
சென்னை உட்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மணடலங்களாக உள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,30,132 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக ஒரே நாளில் 10 ஆயிரத்தை கடந்து கொரோனா பரிசோதனை இன்று ஒரே நாளில் 10,127 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 1384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 35,418 பேரும், அரசு கண்காணிப்பில் 40 பேரும் உள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.