ரிஷப ராசி அன்பர்களே …! எதிர்பார்ப்புக்கள் மிஞ்சி சமாளிக்க முடியாத அளவுக்கு செலவுகள் ஏற்படும். கருத்து வேறுபாடுகளை தவிர்க்க தயவுசெய்து மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. இன்று குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தையும் சாதகமான பலனைக் கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியை கொடுக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர் உடன் இருந்த தடைகள் நீங்கும். பெண்களுக்கு இன்று எதிர்பாராத சில சந்திப்புகள் நிகழும். திடீர் செலவும் உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும்.
உடல் ஆரோக்கியம் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.