விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று எல்லா வளமும் பெருகும். தொழில் வளர்ச்சிக்காக வரும் வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் கூர்மையுடன் சிந்தித்து பின்னர் செய்யுங்கள். பெண்களின் நட்பு ஏற்படும். மன தைரியம் உண்டாகும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும்.
எல்லா காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லா தரப்பினரிடமும் இருந்து ஆதரவும் கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலைநிமிர்ந்து நடக்கின்ற நான் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.காதலர்களுக்கும் உன்னதமான சூழல் நிலவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். மேலும் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.