Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…சஞ்சலம் உண்டாகும்…தடைகள் நீங்கும்…!

 

மகர ராசி அன்பர்களே …!   முயற்சிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை தயவுசெய்து இழக்காமல் இருங்கள். எப்போதுமே வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.

போட்டிகள் குறையும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று கௌரவ பங்கம், அலைச்சல், உடல் உழைப்பு போன்றவை ஏற்படக் கூடும். அதை நீங்கள் கவனத்தில் கொண்டு இன்று அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள்.

வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பெருமையாக தான் செல்ல வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும்  மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |