தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் 116 புள்ளிகளுடனும், நியூசிலாந்து அணி இரண்டாம் இடத்தில் 115 புள்ளிகளுடனும், இந்தியா மூன்றாம் இடத்தில் 114 புள்ளிகளுடனும் இடம்பிடித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்திருந்த இந்திய அணி தற்போது மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளது.
இருந்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகின்றது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி 127 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 119 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. டி20 கிரிக்கெட் தொடரில் மூன்றாம் இடத்தை இந்தியா பிடித்து ஆஸ்திரேலியா 278 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.