Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது… 280 லிட்டரை கீழே ஊற்றி அழித்த போலீசார்!

பெரம்பலூரில் கள்ள சாராயம் காய்ச்சிய இருவரை கைது செய்த போலீசார் 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்துள்ளனர் 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு மேலாக மூடியே உள்ள நிலையில் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சும் சம்பவம் நடந்து வருகின்றது.அவ்வகையில்  பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் செல்வகுமார், மயில்வாகனன் ஆகிய இருவர் மூர்த்தி என்பவரது காட்டில் வைத்து நாட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி உள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து செல்வகுமார் மற்றும் மயில் வாகனனை கைது செய்துள்ளனர் இவர்களுடன் சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்ட மூன்றாவது நபர் தப்பி ஓடிவிட்டார். இருவரும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 250 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை காவல்துறையினர் கீழே ஊற்றி அழித்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |