Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

பதறவைக்கும் கோயம்பேடு….! ”117 பேருக்கு கொரோனா” பல மாவட்டங்களுக்கு பரவியது …!!

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய பலருக்கும் கொரோனா உறுதியாகி வருவது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ல் இருந்து ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 5 நாட்களாக 103, 94, 138, 176, 174 என்ற எண்ணிக்கையில் மட்டும் 685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது.

Covid-19 lockdown: Small businesses in Chennai feel the pinch ...

சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தையில் தொடர்புடைய பலருக்கும் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.  இதில் சென்னை 52 , அரியலூர் 22, விழுப்புரம் 20 கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |