இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40ஆயிரத்தை நெருங்க இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் 37,776லிருந்த கொரோனா பாதிப்பு 39,980ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10018லிருந்து 10,633ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1223லிருந்து 1,301ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12,296 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் 5,054 பேருக்கும், டில்லியில் 4,122 பேருக்கும், மத்தியப்பிரதேஷத்தில் 2,788 பேருக்கும், ராஜஸ்தானில் 2,772 பேருக்கும், தமிழ்நாட்டில் 2757 பேருக்கும் உத்தரப்பிரதேஷத்தில் 2,487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.