Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1257ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், திரு.வி.க. மண்டலத்தில் மொத்தமாக 290 பேர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் 252 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டை – 132, தண்டையார்பேட்டை- 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திருவொற்றியூர் – 20, மணலி – 5, மாதவரம் – 8, அம்பத்தூர் – 42, அண்ணாநகர் – 108, கோடம்பாக்கம் – 141, வளசரவாக்கம் – 77, ஆலந்தூர் – 10, அடையாறு – 27, பெருங்குடி – 10, சோளிங்கநல்லூர் – 5, மற்ற மாவட்டம் – 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறியுள்ளது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது . அதில் சென்னையில் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

Categories

Tech |