Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் சி.ஆர்.பி.எப். உயரதிகாரிக்கு கொரோனா உறுதி…. தலைமை அலுவலகத்திற்கு சீல்!

டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் இதுவரை 39, 980 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,301 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்து 633 பேர் கொரோனோவால் இருந்து குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 2,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 682 பேர் குணமடைந்துள்ளனர். முதல்முறையாக ஒரே நாளில் கொரோனோவால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரததைக் கடந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 28,046 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த நிலையில் சி.ஆர்.பி.எப். உயரதிகாரியுடன் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆக உள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகத்திற்கு சீல் வைகப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி பட்டாலியனைச் சேர்ந்த 135 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |