கொரோனா வைரஸூக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்கள் உள்ளிட்டோரை முப்படையினரும் இன்று கவுரவிக்கும் வகையில் மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது.
கொரோனாவை வீழ்த்த போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் உள்ளிட்டோர் முப்படைகள் சார்பில் கவுரவிக்கப்படுவார்கள் என முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார். இதன்படி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து இரு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள் மருந்து பொருட்களுடன் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து மருத்துவமனைகள் மீது பூ தூவின.
அதேபோல சுகோய், மிக் மற்றும் ஜாகுவார் ஆகிய 9 போர் விமானங்கள் டெல்லியின் வான்பரப்பில் பறந்து மருத்துவர்களை கவுரவித்தன. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை மீது மலர்தூவி ராணுவம் மரியாதை செலுத்தினர்.
#WATCH: Indian Air Force (IAF) helicopter showers flowers on All India Institute of Medical Sciences (AIIMS) in Patna to express gratitude and appreciation towards health workers fighting #COVID19. #Bihar pic.twitter.com/7TgyJVwEaR
— ANI (@ANI) May 3, 2020
கொரோனா முன்கள வீரர்களான மருத்துவப் பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைகள் மீது மலர்தூவி, பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டு முப்படை மரியாதை செலுத்தியது. அதன் படி மருத்துவமனைகளின் மீது பூ தூவப்பட்டது. மருத்துவர்கள் மருத்துவமனையின் வெளியே வந்து நின்று மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதேபோல நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மலர்கள் தூவப்பட்டது.