Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

இளைஞர்களின் கண்களில் ஏக்கத்தை உருவாக்கி…. ஜெஸ்ஸியாக நிலைத்து நிற்கும் திரிஷா…!!

தமிழ் திரையுலகில் அறிமுகமான திரிஷா பல வெற்றிப்படங்களை கொடுத்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களே.  சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதோடு அதற்கு உயிர் ஊட்டும் விதமாக தனது நடிப்பையும் வெளிப்படுத்துபவர்.  திரையுலகில் கால் பதித்து இருபது வருடங்களை கடந்த நிலையிலும் பலரது மனதில் கனவுக்கன்னியாக நிலைத்து நிற்பவர் திரிஷா. இளைஞர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்த முக்கிய படங்கள் கில்லி மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா

கில்லி

படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியும் இன்றும் பிரகாஷ்ராஜின் ஹாய் செல்லம் டயலாக் செம ஃபேமஸ் இந்த டயலாக்குக்கு அன்றும் உரியவர் திரிஷா இன்றும் உரியவர் திரிஷாவே தான் என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்களை தன் நடிப்பால் கட்டிப்போட்டவர்  த்ரிஷா. தனலட்சுமிக்கும் வேலுவுக்கும் இடையே இருந்த காதலை கண்டு வேம்பாத இளைஞர்கள் இல்லை. அதே போல கில்லி கிளைமாக்ஸ் காட்சிகளில் தனலட்சுமியை தேடும் வேலுவின் கண்களில் இருந்த ஏக்கம் இப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் அடுத்த படத்தை நோக்கிய இளைஞர்களின் கண்களில் இருக்கவே தான் செய்தது.

விண்ணை தாண்டி வருவாயா

படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியும் திரிஷா இளைஞர்களின் மனதில் ஜெஸ்ஸியாக நிலைத்து நிற்கிறார். திரிஷாவை ரசிக்க மறந்தவர்களும் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த பிறகு நிச்சயம் அவரை காதலித்து இருப்பார்கள். ஏனென்றால் அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் பல ஆண்களின் முதல் காதலையும் அது தோல்வியடைந்த பின் அவர்கள் அனுபவித்த வலியையும் திரையில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

Categories

Tech |