Categories
தேசிய செய்திகள்

ஆரோக்கிய சேது செயலியால் பறிபோகும் “அந்தரங்கம்” – கவலையில் ராகுல்காந்தி!

கொரோனா பரவலை தடுக்கும்  விதமாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ‘ஆரோக்கிய சேது’ என்ற செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது.

இச்செயலி, மக்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆரோக்கிய சேது செயலி பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்ட 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோரால் டவுன்லோடு  செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த  செயலியால் பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் அந்தரங்கம் பறிபோவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது : ஆரோக்யா சேது பயன்பாடு, ஒரு அதிநவீன கண்காணிப்பு அமைப்பாகும், மேலும் இது ஒரு பிரைவேட் ஆபரேட்டருக்கு தரவுகளை வழங்குவதாகவும் உள்ளது, நிறுவன மேற்பார்வை இல்லாமல் – தீவிர தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகளை எழுப்புகிறது. தொழில்நுட்பம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க உதவ வேண்டும்; ஆனால் குடிமக்களின் அனுமதியின்றி அவர்களைக் கண்காணிக்க பயன்படுத்தப்படக்கூடாது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |