தேர்தல் நெருங்கும் பட்சத்தில் வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த 11 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து ஏப்ரல் 18-ம் தேதி என்று தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் சேர்த்து மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின.
இதனையடுத்து தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் கொண்டாட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது இதனை அடுத்து வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஆனது தமிழகத்தில் பெருமளவில் நடைபெற்று வந்தது 100 சதவீத வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில் அனைவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வாக்காளர் அட்டை பலரிடம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்து வாக்காளர் அட்டையை பெறாதவர்கள் அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்காணும் உரிமங்களை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன இதனையடுத்து ஆதார் கார்டு ,ஓட்டுனர் உரிமம், போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ,புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் அஞ்சலகங்க கணக்கு விபர புத்தகங்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை ,தொழிலாளர் நல அமைச்சகம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ,ஸ்மார்ட் கார்டு , பாராளுமன்ற சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்கு அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நபர்கள் மேற்கண்ட இந்த ஆவணங்களை முறையாக காண்பித்து வாக்கு அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன மேலும் 100 சதவீத வாக்கினை செயல்படுத்தும் விதமாக இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .