உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.
பல்வேறு நாடுகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 45 ஆயிரத்து 050 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 லட்சத்து 28 ஆயிரத்து 511 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளுக்கும் மேல் பரவியது.
இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் அனைத்து நாடுகளும் தவித்து வருகின்றன. உலக நாடுகளில் அதிகம் பாதித்த அமெரிக்காவில் மட்டும் 35 லட்சத்து 01 ஆயிரத்து 691 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 11 லட்சத்து 60ஆயிரத்து 996 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளார். அடுத்தபடியாக ஸ்பெயினில் 245,567, இத்தாலி 209,328, பிரிட்டன் 182,260, பிரான்ஸ் 168,396, ஜெர்மனி 164,967, ரஷ்யா 134,687 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.