இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,263ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,487 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுதுவம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,306 ஆக உள்ள நிலையில் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 10,887ஆக உள்ளது.
மேலும் தற்போது 28,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 12,296 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு 521 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து குஜராத்தில் 5,054 பேரும், டெல்லியில் 4,122 பேரும், ராஜஸ்தானில் 2,832 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 60 பேர் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 35 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்த எண்ணிக்கை 701 ஆக உள்ளது.
காஷ்மீரில் 640 மற்றும் ஜம்முவில் 61 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் நேற்று மாலை 5 மணி முதல் இன்று மாலை 5 மணி வரை 13 பேர் புதிதாக கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்னர். இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 293 குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 614 ஆக உள்ளது. ஹரியானாவில் இன்று மட்டும் 45 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 421 ஆக உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 34 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அங்கு ஒருவருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.