Categories
உலக செய்திகள்

கத்துக்கிட்டு… “வறுமையால் தனியாக கடை வைத்த நபர்”… பட்டப்பகலில் தந்தையும் மகன்களும் தாக்கிய கொடூரம்!

போட்டியாக உணவகம் திறந்தவரைப் தாக்கியவருக்கு நீதிமன்றம் தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியுளளது.

சுவிட்சர்லாந்து துர்ன் பகுதியில் துருக்கி நாட்டவர் ஒருவர் தனது சகோதரர் மற்றும் தந்தையின் உதவியுடன் உணவு கடை ஒன்றை வைத்திருந்தார். அந்த கடையில் துருக்கியர் ஒருவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடும்பச் சூழலின் காரணமாக பணியாற்றி வந்தவர் தனியாக கடை ஒன்று போட திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு மிக விரைவில் கடையை தொடங்கி விட்டார். இது உரிமையாளர்களுக்கு கோபத்தைத் தூண்டி உள்ளது. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக கடை திறந்தவரிடம் தந்தையும் இரண்டு மகன்களும் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்ற துருக்கியரை தந்தையும் மகனும் சேர்ந்து கொடூரமாக கத்தியால் தாக்கிவிட்டு தப்பி உள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நீதிபதி முக்கிய குற்றவாளியான 37 வயது உடைய மகனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட நபருக்கு 45,000 பிராங்குகள் இழப்பீடாக கொடுக்கவும் நீதிமன்றத்தின் செலவுகளுக்கு 17 450 பிராங்குகள் கொடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளார்.  அதோடு இந்த வழக்கில் குற்றவாளி என தீர்பாக்கியுள்ள தந்தையும் சகோதரரும் நிரபராதி எனக் கூறியதோடு அவர்கள் கைதிகளாக சிறையில் இருந்ததற்கு இழப்பீடாக 65 வயதுடைய தந்தைக்கு 36150 பிரங்குகளும் அவரது மகனுக்கு 17,000 பிராங்குகளும் கொடுக்க உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம். ஒரு பிராங்குகள் என்றால் இந்திய ருபாய் மதிப்பில் 78.63 என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |