Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: குட் நியூஸ் : தமிழகத்தில்  1379 பேர் குணமடைந்துள்ளனர் …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் கட்டுக்கடங்காமல் செல்வது மத்திய,  மாநில அரசுகளின் பொருளாதாரத்துக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40,000தத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1458ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. அதே கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1379ஆக உயர்ந்துள்ளது. இதனால் 1611 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |