Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…பயம் அகலும் …புகழ் ஓங்கும் …!

ரிஷப ராசி அன்பர்களே …!    பெரிய மனிதர்கள் சகவாசத்தால் நல்லது நடக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும். நல்ல வாய்ப்புகள் வீட்டு வாயில் கதவை தட்டும், புகழ் ஓங்கி நிற்கும். விருப்பங்களும் கைகூடும். இன்று நன்மைகள் அனைத்து விஷயங்களிலும் நடக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் வாங்கலாம் என்ற சிந்தனை மேலோங்கும்.

எதிலும் தயக்கமோ பயமோ இன்று ஏற்படாது. பெரியோரின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைப்பதால் அனைத்து விஷயங்களுமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும். வாக்கு வன்மையால் லாபம் பெருகும் பழைய பாக்கிகளும் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும்.

காதலர்களுக்கும் இன்று சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் காதலர்கள் பேசும் போது நிதானத்தை மட்டும் கடைபிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோல இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை செய்யுங்கள் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |