Categories
தேசிய செய்திகள்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கு – சாமியார் உட்பட 4 பேர் விடுதலை…!!

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயில் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 4-பேரை விடுதலை செய்து என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அரியானா மாநிலத்தில் உள்ள பானிபட் அருகே கடந்த 2007ம் வருடம் பிப்ரவரி மாதத்தில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் இரயிலில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 68-பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதல்  காரணமான 4-பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பஞ்ச்குலாவில் அமைந்துள்ள என்.ஐ.ஏ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது.

Image result for Samjhauta express train blast case - 4 people release

இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணை செய்த சிறப்பு நீதிபதி இரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சாமியார் அசீமானந்த், லோகேஷ் சர்மா,கமல் சவுகான் மற்றும் ராஜிந்தர் சவுத்ரி ஆகிய 4 பேரையும் விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

Categories

Tech |