Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சின்ன தப்பு செஞ்சாலும் அவ்வளவுதான்”… கொரோனாவை டெஸ்ட் கிரிக்கெட்டோடு ஒப்பிட்டு பேசிய கங்குலி!

கரடுமுரடான களத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று தற்போதைய சூழல் இருப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. நேற்று நிலவரப்படி 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்குலி தற்போது உள்ள நிலை கரடுமுரடான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்ற சூழ்நிலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் “தற்போதுள்ள சூழல் ஆபத்தான ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டி விளையாடுவது போன்று உள்ளது. சீமிங் மற்றும் ஸ்பின்னிங்க்கு பந்து நன்றாக துணை போகும். பேட்ஸ்மேன் சிறிய தவறு செய்தாலும் அவ்வளவுதான். தவறு செய்யாமல் அதே நேரம் ரன்களும் அடிக்க வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். தற்போது இருக்கும் சூழல் மிகவும் கடினமானதாக தான் உள்ளது ஆனால் அனைவரும் ஒருங்கிணைந்து இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என கூறியுள்ளார்.

Categories

Tech |