உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் 38 நாடுகள் எந்த உயிரிழப்பையும் சந்திக்காதது நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
மிரண்டு போன வல்லரசு நாடு:
உலகையே பொருளாதார பலத்தால் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா கொரோனாவால் கடும் இன்னலை சந்தித்துள்ளது. அங்கு மட்டும் 1,188,421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 68,602 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல பொருளாதாரத்தில் வளர்ந்த நிலையில் உள்ள ஸ்பெயினில் 247,122 பேர் பாதிக்கப்பட்டு 25,264 உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 210,717 பேர் தாக்கிய கொரோனா 28,884 பேரின் உயிரை பறித்துள்ளது. பிரிட்டனில் 186,599 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 28,446 மரணம் அடைந்துள்ளனர். பிரான்ஸ்சில் 168,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு 24,895 பேர் மரணமடைந்துள்ளார்.
அனைத்து நாடுகளிலும் உயிரை பறித்துச் சென்ற கொரோனா 38 நாடுகளிடம் ஏமாந்துள்ளது. இங்கு ஒருவர் கூட மரணமடையவில்லை
- ரியூனியன் – பாதிப்பு 423
- வியட்நாம் – பாதிப்பு 271
- ருவாண்டா – பாதிப்பு 255
- ஃபெரோ தீவுகள் – பாதிப்பு 187
- மடகாஸ்கர்,- பாதிப்பு 149
- ஜிப்ரால்டர் – பாதிப்பு 144
- கம்போடியா – பாதிப்பு 122
- உகாண்டா, – பாதிப்பு 88
- நேபாளம் – பாதிப்பு 84
- மொசாம்பிக் – பாதிப்பு 79
- மத்திய ஆப்பிரிக்க குடியரசு – பாதிப்பு 72
- பிரெஞ்சு பாலினேசியா – பாதிப்பு 58
- தெற்கு சூடான் – பாதிப்பு 46
- மக்காவோ – பாதிப்பு 45
- எரித்திரியா – பாதிப்பு 39
- மங்கோலியா – பாதிப்பு 39
- திமோர்-லெஸ்டே – பாதிப்பு 24
- கிரெனடா – பாதிப்பு 21
- லாவோஸ் – பாதிப்பு 19
- பிஜி – பாதிப்பு 18
- புதிய கலிடோனியா – பாதிப்பு 18
- செயிண்ட் லூசியா – பாதிப்பு 17
- டொமினிகா – பாதிப்பு 16
- நமீபியா – பாதிப்பு 16
- செயின்ட் வின்சென்ட் கிரெனடைன்ஸ் – பாதிப்பு 16
- செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் – பாதிப்பு 15
- பால்க்லேண்ட் தீவுகள் – பாதிப்பு 13
- கிரீன்லாந்து – பாதிப்பு 11
- வாடிகன் நகரம் – பாதிப்பு 11
- சீஷெல்ஸ் – பாதிப்பு 11
- பப்புவா நியூ கினி – பாதிப்பு 8
- பூட்டான் – பாதிப்பு 7
- கரீபியன் நெதர்லாந்து – பாதிப்பு 6
- செயின்ட் பார்த் – பாதிப்பு 6
- மேற்கு சாஹாரா – பாதிப்பு 6
- அங்குவிலா – பாதிப்பு 6
- கொமொரோஸ் – பாதிப்பு 3
- செயிண்ட் பியர் மிக்லோன் – பாதிப்பு 1
மேலே கூறிப்பிட்டுள்ள 38 நாடுகளில் கொரோனா உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது உலக நாடுகளின் கவனத்தை பெற்றுள்ளது.