ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் காணொளிகளை பதிவிட்டு வருகிறார்
பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகைருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர் முன்னாள் உலக அழகியும் பிரபல ஹிந்தி நடிகையுமான பிரியங்கா சோப்ரா. கொரோனா காரணமாக அனைவரும் வீட்டிலேயே நேரத்தை போக்கி வருகின்றனர். உலகமே சோர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் உலகம் முழுவதிலும் இருக்கும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பதிவுகளின் மூலம் உத்வேகம் அளித்து வருகின்றார் பிரியங்கா.
https://www.instagram.com/p/B_sk9Czjs8c/?utm_source=ig_web_copy_link
பொதுவாகவே பிட்னெஸ்ஸில் அதிக கவனம் செலுத்தும் பிரியங்கா தற்போது வீட்டில் இருக்கும் கோச்சில் சாய்ந்தவாறு உடற்பயிற்சி கருவியான டம்புள்ஸ்க்கு பதிலாக ஒரு குழந்தையை தூக்கி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.”ஜிம் இல்லை என்றால் என்ன? எந்த ஒரு பிரச்சினையும் இல்லை” என்ற வரிகளுடன் பிரியங்கா பதிவிட்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.