Categories
ஆன்மிகம் இந்து பல்சுவை

தீமைகள் அகல…. நன்மைகள் பெறுக…. நரசிம்மர் ஜெயந்தி…!!

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் விசேஷமானது.  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம். சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார் விஷ்ணு. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். திருப்பதி வெங்கடாசலபதி தன் திருமணத்திற்கு முன்பு அஹோபிலம் சென்று நரசிம்மரிடம் ஆசி பெற்றார். வெங்கடாசலபதியின் திருமணத்திற்கு பிறகு முதலில் நரசிம்மருக்கு நைவேத்தியம் செய்த பின்பே அனைவரும் உணவு அருந்துகின்றனர்.

நரசிம்மரையும் வெங்கடாஜலபதியை தரிசித்தால் சிறப்பான வாழ்வு அமையும். நரசிம்மருக்கு 30  பெயர்களுண்டு சூரியன் மறையக் நொடியில் மாலை சந்தி பொழுதில் நரசிம்மரை வழிபடுவது நரசிம்மர் ஜெயந்தி ஆகும். தமிழகத்தில் எட்டு இடங்களில் அஷ்ட நரசிம்மர் காட்சி அளிக்கிறார். பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரி கோவில், சோளிங்கர், சிங்கப்பெருமாள் கோவில், நாமக்கல், சிந்தலவாடி, அந்திலி. தீமைகள் அகல நன்மைகள் பெருக அழகியசிங்கரை  போற்றி வணங்குவோம்.

Categories

Tech |