தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரம் ஆகும். நரசிம்மர் என்றால் ஒளிபிழம்பு என்று பொருள் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் உக்கிரமானதாக கருதப் பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வாங்குகிறார்கள். நரசிம பகவானை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளின் தொல்லை விலகும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார்.
நரசிம்மரை மர்த்யுவே சுவாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும். அடித்த கை பிடித்த பெருமாள் என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்டு மறு வினாடியே உதவுவான் என்று இதற்குப் பொருள். நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். நரசிம்மரை வணங்கும் பக்தர்களுக்கு அவரும் அருள் புரிவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் எட்டு திசைகளும் புகழ் கிடைக்கும்.
ராமருக்கும் கிருஷ்ணருக்கும் நம் நாட்டில் தனி ஆலயங்கள் ஏராளம் உள்ளன. அந்த அளவுக்கு நரசிம்மருக்கு அமைந்த ஆலயங்கள் குறைவே. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அவருக்கு தனி கோவிலும் சிறப்பு வழிபாடுகளும் அதிகம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று சூரியன் மறையும் நொடியில் மாலை அந்தி பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தி ஆகும். சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்