அரியலூர் மாவட்டத்தில் 4 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உட்பட 24 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று அரியலூர் மாவட்டத்தில் சுமார் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரில் சென்னை பீனிக்ஸ் மாலில் இருந்து திரும்பிய பெண் ஒருவர், மருந்தக உரிமையாளர் ஒருவர் மற்றும் அவரது கடை ஊழியர்கள் இருவர் ஆகியோருக்கு கொரோனா பரவியது. அந்தப் பெண்கள் மூலம், அவர்கள் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுவன் உள்பட இருவருக்கு பரவியது.
மொத்தம் 6 பேருக்கு கொரோனா இருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து திரும்பிய 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது, கோயம்பேடு தொடர்புடையே மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கொரோனா எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பியவர்கள் இருந்தால், அவர்கள் குறித்த தகவல் தருமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.