Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுமார் 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க முடிவு: சென்னை மாநகராட்சி ..!

சென்னையில் உள்ள 900 பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் கொரோனா சிறப்பு மையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. திரு.வி.க. நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில் முகாம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 203 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 1460 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக, திரு.வி.க மண்டலத்தில் 324 பேருக்கும், ராயபுரத்தில் 275, கோடம்பாக்கம் மண்டலத்தில் 199, தேனாம்பேட்டையில் 166, அண்ணா நகர் மண்டலத்தில் 130, தண்டையார் பேட்டையில் -118 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பால் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் உள்ள படுக்கைகளும் நிரம்பியுள்ளன. நேற்று சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் உள்ள 400 படுக்கைகள் முழுவதும் நிரம்பியது. அதேபோல, ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள 500 படுக்கைகளும் முழுவதும் நிரம்பின.

இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் நிரம்பியதை தொடர்ந்து சுமார் 900 பள்ளிகளை கொரோனா சிறப்பு மையங்களாக அமைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

Categories

Tech |