தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதில் தற்போது கடலூரில் இன்று 107 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பிய 600-க்கும் மேற்பட்டோர்கள் திட்டக்குடி விருத்தாசலம் கடலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் பிரித்து வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் முதல் அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையை முடிவுகள் படிப்படியாக வெளியாகிக் கொண்டிருக்கிறது நேற்று வரை கிட்டத்தட்ட 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை இன்று ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது இது மிகப்பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் கொரோனா பரவாமல் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.