Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனாவின் கூடாரமான கோயம்பேடு…! மொத்த பாதிப்பு 300ஐ தாண்டியது ….!!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் 300க்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,458ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 685 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கடலூரில் அதிகபட்ச்சமாக 129 பேரும், விழுப்புரம் 76 பேரும், சென்னை 63 பேரும், அரியலூர் 43 பேரும், காஞ்சிபுரம் 7 பேரும், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றே கீழ்பாக்கம், ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்ட்கள் நிரம்பியுள்ள நிலையில் தற்போது சென்னை கொரோனவால் தடுமாறி வருகின்றது.

Categories

Tech |