Categories
உலக செய்திகள்

சிறுவர்கள் செய்த சேட்டை… விலையுயர்ந்த கார்களை… சர்வ சாதாரணமாக ஆட்டைய போட்டதால் ஆடிப்போன போலீசார்…!!

அமெரிக்காவில் பொழுதுபோக்கிற்காக விலை உயர்ந்த 46 கார்களை சிறுவர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலக நாடுகளிடையே கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீட்டிலேயே இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அமெரிக்காவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு தேவையின்றி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் திருடு போகும் கார்கள்

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் இருக்கும் போர்சித் கவுண்டியில் விலை உயர்ந்த கார்கள் பல திருடு போய் உள்ளன. ஊரடங்கள் மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வராத சூழலில் விலையுயர்ந்த கார்கள் அதிக அளவில் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணை

இது குறித்து காவல்துறையினருக்கு ஏராளமான புகார்கள் குவிய  அவர்கள் விசாரணை மேற்கொள்ள திருடன் குறித்த எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காததால் இச்சம்பவம் தொடர்பான வழக்குக்கு உளவுத் துறையினரை ஏற்பாடு செய்தனர். விசாரணை மேற்கொள்ள தொடங்கியதில் மெகீல் பீன்ஸ் என்ற 19 வயது சிறுவன் திருட்டு காரை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிர்ந்த காவல்துறை 

இதனைத் தொடர்ந்து அவனிடம் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் பல கிடைக்கப்பெற்றுள்ளது. திருடுபோன அனைத்து விலை உயர்ந்த கார்களையும் திருடியது 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அவர்களது குழுவில் ஒன்பது வயது சிறுவனும் இருப்பது அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் விலை உயர்ந்த கார்கள் ஆன ஆடி, செவர்லெ, போர்டு டொயாட்டோ என பலதரப்பட்ட கார்களை பூட்டை திறந்து சர்வசாதாரணமாக திருடி சென்றுள்ளனர்.

சிறுவர்களின் விளையாட்டு

ஊரடங்கால் வீட்டிலேயே மக்கள் முடங்கி இருப்பதால் சிறுவர்கள் பொழுதுபோக்காக நினைத்து சவால்விட்டு கார்களை திருடி உள்ளனர். முதலில் குழுவாக சேர்ந்து காரை முடிவு செய்து யார் அந்த காரை எடுத்து வர வேண்டும் என டாஸ் போட்டு தேர்வு செய்கின்றனர் குறிப்பிட்ட இடத்திற்கு  காரை கொண்டு வரும்படி கூறிவிட்டு சென்று விடுகின்றனர்.

ஹீரோ பட்டம்

தேர்வு செய்யப்பட்டு காரை திருடுபவன் குறிப்பிட்ட இடத்திற்கு காரை கொண்டு சென்றதும் அங்கு வைத்து மற்ற சிறுவர்கள் அச்சிறுவனுக்கு ஹீரோ பட்டம் சூட்டி காருடன் புகைப்படமெடுத்து கொண்டாடுகின்றனர். பொழுதுபோக்காக சிறுவர்கள் திருடிய 46 கார்களின் மொத்த மதிப்பு 8.36 கோடி ரூபாய்.

விற்கப்படும் கார்கள்

19 பேர் கொண்ட இந்த குழு திருடப்பட்ட காரை அதிக பணம் தரும் நண்பர்களிடம் கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவ்வாறு திருடப்பட்ட காரை வாங்கியவர் தான் மெகீல்  பீன்ஸ். அவர்  அளித்த தகவலின் அடிப்படையிலையே சிறுவர்கள் பற்றிய முழு தகவலையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அபாரதத்துடன் எச்சரிக்கை

பிடிபட்ட அனைவரும் சிறுவர்கள் என்பதால் கைது செய்யாமல் ஊரடங்கு மீறி வெளியில் வந்ததற்காகவும் திருட்டு காரை வைத்திருந்ததாகவும் அபராதம் விதித்ததோடு சிறுவர்களின் பெற்றோர்களிடம்  அவர்களை ஒழுங்காக அடக்கி வைக்காவிட்டால் பெரும் பிரச்சினைகளை சந்திக்க கூடுமென காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |