Categories
தர்மபுரி மாநில செய்திகள்

“ரம்ஜான் நோன்பு” 2,895 பள்ளிவாசலுக்கு….. 5,450 டன் அரிசி…… தமிழக அரசு அதிரடி…..!!

ரம்ஜான்  பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2,895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசலில் 700 குடும்பங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைதாங்க, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு பொருட்களை வழங்கினார். விழாவிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாகவும் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 29 பள்ளிவாசல்களில் 20,595 நபர்கள் பயன்பெறும் வகையில், 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அரிசியுடன், பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், கோதுமை மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களும் தமிழகம் முழுவதும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பரவலை தடுப்பததற்காக பள்ளிவாசல்களில் ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை தயாரிக்கும் பொருட்களை அரசு வழங்கியுள்ளதால் பள்ளிவாசல்கள் அதனை தகுதியான குடும்பங்களுக்குத் தேவையான அளவு பிரித்து வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுமாறு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |