கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றோடு 41வது நாள் ஊரடங்கு நடைபெறும் நிலையில், இதற்கு முன்னதாகவே பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
அதேபோல அரசு தேர்வுகள் பலவும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதற்கான மறு தேர்வு நடைபெறும் தேதி மே 20-ஆம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.