Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை… .. ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா!

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரோனோ வைரஸ் பாதித்தவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றிய திருவல்லிக்கேணியை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மனைவி உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே உறுதியான நிலையில் மேலும் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடைய 220 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மட்டும் நேற்று வரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |