கோயம்பேடு காய்கறிச்சந்தையில் இருந்து திருவண்ணாமலை வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மூடும் முடிவில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் இருந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது கோயம்பேடு காய்கறிச் சந்தையில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் கோயம்பேடு சந்தை மூலம் ஏற்கனவே 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிதவர்கள் எண்ணிக்கை 25ஆகியுள்ளதால் ஆரஞ்சு மண்டலமாக இருந்த திருவண்ணாமலை சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது.