Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர் மற்றும் 50 வயது பெண் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30ஆக உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 82 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதேபோல சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 50 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்கள் எண்ணிக்கையானது 32ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை, கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் மட்டும் நேற்று வரை 77 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |