சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது..
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை எளிய மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனால் தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டை பெற்றது..
அதை தொடர்ந்து இன்றைய நாளில் இருந்து 14 நாட்களுக்கு 3ஆம் கட்ட , ஊரடங்கு சில தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் மீண்டும், பழையபடியே உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வழக்கம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு டிடிவி தினகரன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. இதனால் ஏழை எளிய சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்..