Categories
மாநில செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு..!

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது.

நெய்வேலி என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு செல்லும். இந்த விரிவாக பணியில், பெல்ட் செல்லும் பாதையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்வேயர் பெல்ட்டில் சுமார் 100 மீட்டர் அளவிற்க்கு பரவியுள்ளது. இதையடுத்து என்.எல்சி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக கன்வேயர் பெட்ல மூலம் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயை கட்டுப்படுத்தியவுடன் கன்வேயர் பெல்ட் மாற்றப்பட்டு பிறகு நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |