Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்கள் இப்படி பண்ணலாமா… முயல்களை வேட்டையாடி… சமைத்து சாப்பிட்டதால் 90 ஆயிரம் அபராதம்!

முயலை வேட்டையாடுவதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்ட மாணவர்களுக்கு 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த எட்டுபுலிக்காடு கிராமத்தில் இருக்கும் ஆறு மாணவர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் முயல்களை வலைவிரித்து வேட்டையாடி உள்ளனர். பின்னர் அங்கிருக்கும் வயலில் வைத்தே சமைத்து விருந்து போல் சாப்பிட்டுள்ளனர்.  முயலை வேட்டையாடியது  தவறு என்பது கூட உணராத அந்த மாணவர்கள் அவர்கள் செய்த தவறை வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளனர்.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவ தகவலறிந்த பட்டுக்கோட்டை வனத்துறை டிக் டோக்கில்  இருந்த மாணவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 6 பேரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்தது. தங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்ட 6 பேரிடமும் தலா 15 ஆயிரம் வீதம் மொத்தம் 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வன விலங்குகளை வேட்டையாடுவது தவறு என்றும் அந்த தவறில் ஈடுபடுபவர்கள் இனி வரும் காலங்களில் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |