கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதில் ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் ஆவர்.. இதனால் தமிழகத்தில் இதுவரை மொத்தமாக ஆண்கள் – 2,392 பேர், பெண்கள் – 1,157 திருநங்கை ஒருவர் என ஓட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,023ல் இருந்து 3,550 ஆக அதிகரித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,107ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானோரின் எண்ணிக்கை 30ல் இருந்து 31 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இன்று தமிழகத்தில் 30 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,379ல் இருந்து 1,409ஆக உயர்ந்துள்ளது.