தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.
அதே போல இன்று வெளியான தகவலில் படி கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாளில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்துள்ளதால் அதன் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது.