Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“PASS வதந்தி” படையெடுத்த 500 தொழிலாளர்கள்…… ஸ்கெட்ச் போட்டு நிறுத்திய போலீஸ்….. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்தில் காவல் நிலையத்தில் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான பாஸ் வழங்கப்படுவதாக கூறியதையடுத்து 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் படையெடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பலர் உணவின்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில்,

காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வடமாநில தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளதாலும், கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் தொழிலாளர்கள் வேலையின்றி, உணவுக்கும் வழியின்றி தவித்து வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அவர்களுக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து வந்தனர். ஊரடங்கு நிலுவையில் உள்ளதால் அவர்களை அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு செல்வோருக்கான பாஸ் வழங்கப்படுவதாக வதந்தி ஒன்று கிளம்பியது இதை உண்மை என நம்பி வடமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 500 மேற்பட்டோர் காவல்நிலையம் நோக்கி படையெடுத்து நடைபயணம் மேற்கொண்டனர்.

இதையறிந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் உடனடியாக அதிகாரிகளை அனுப்பி ஆங்காங்கே நடைபயணம் மேற்கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி பாஸ் ஏதும் வழங்கப்படவில்லை. வதந்தியை நம்ப ஏமாற வேண்டாம் திரும்பி உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். அரசு உங்களுக்கு உரிய உதவியை அளிக்கும் என்று கூறிய பின் அவர்கள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |