என்றும் இல்லாத அளவில் தமிழகத்தில் இன்று கொரோனா எண்ணிக்கை அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு சந்தை தான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இருமடங்காக அதிகரித்துள்ளது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழக்தில் காரோணவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,550 ஆக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 377 பேர், பெண்கள் 150 பேர் ஆவர். இதுவரை மொத்தமாக, 2,392 ஆண்களுக்கும், 1,157 பெண்களுக்கும் மற்றும் ஒரு திருநங்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கர்ணனால் மேலும் ஒருவர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 2,107 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்துள்ளனர்.
மொத்தமாக, தமிழகத்தில் 1,409 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவால் கோயம்பேடு சந்தையில் மட்டும் 200க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு சென்ற எண்ணற்றோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது