Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் பிறந்து 3, 10 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னையில் பிறந்து 3, 10 மற்றும் 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை தகவல் தகவல் அளித்துள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் சென்னை மட்டுமின்றி விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்று கடலூரில் 122 பேரும், விழுப்புரத்தில் 49 பேரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி சென்னையில் பிறந்து 3, 10 மற்றும் 50 நாட்களே ஆன குழநதைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 30 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,409ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |