பைக் ஓட்டி வந்த குரங்கு சிறுமியை தரதரவென இழுத்துச் சென்றது பார்ப்போர் மனதை பதட்டம் அடைய செய்துள்ளது
கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதனால் சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஏற்றார் போல் வித்தியாசமான மற்றும் அபூர்வமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணமுள்ளது.
அவ்வகையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு “நாம் நிச்சயமாக விசித்திரமான காலத்திலேயே வாழ்ந்து வருகிறோம். கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட குரங்கு” என்றும் ட்விட் செய்துள்ளார். அவர் பதிவிட்ட வீடியோவில் குரங்கு ஒன்று சிறிய பைக்கை ஓட்டி வருகின்றது. பின்னர் வழியில் ஓரமாக அமர்ந்து இருந்த சிறுமியை தரதரவென இழுத்துக் கொண்டு செல்கின்றது.
We are surely living in strange times😳
Broad daylight kidnapping attempt by monkey……VC- Rex pic.twitter.com/04grUaB4eY
— Susanta Nanda (@susantananda3) May 4, 2020
அதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும் குரங்கு சிறுமியை விட்டுவிட்டு சென்று விடுகிறது குரங்கு இழுத்துச் சென்றதால் குழந்தைக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை இதனால் சிறுமி தானாகவே எழுந்து சென்று விடுகிறாள். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
இந்த சம்பவம் இந்தோனேசியாவில் தஞ்சுங்க்சரி(Tanjungseri) என்ற பகுதியில் நடந்துள்ளது. அதாவது அங்கு குரங்கு வித்தையின்போது குரங்கின் உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாகவே குரங்கு இவ்வாறு நடந்து கொண்டது என்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உரிமையாளரிடம் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் குழந்தையை குரங்கு இழுத்து செல்லும் வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போயுள்ளனர்.